ஹலோ, மீண்டும் உங்களைச் சந்திக்கிறோம்.

எங்களிடம் புதிய வீடியோ படம் ஒன்று இருக்கிறது. ஆனால் இது ஒருவர் இன்னொருவரைப் புண்படுத்துவதற்காகத் தயாரிக்கப்பட்ட செக்ஸ் வீடியோ அல்ல. அதை விட இது மிகுந்த கவர்ச்சியானது. இது தேர்தலில் போடும் வாக்கைப் பற்றியது.

வாக்களிப்பது குடிமக்களுக்கான அடிப்படை உரிமை. இது மலேசியாவின் சமூக, அரசியல், பொருளாதாரப் போக்குகளைக் குடிமக்களாகிய நாம்  தீர்மானிப்பதற்கு உரிய உரிமையாகும். ஆகவே இது நமது கடமைகளில் முக்கியமான ஒன்று. நம் வாழ்நாள் முடிந்த பிறகும் இதன் விளைவுகள் தொடரும். ஆகவே உங்களுக்காக மட்டுமன்றி உங்கள் எதிர்காலச் சந்ததியினருக்காவும் நீங்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்.

இந்த வீடியோ படம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். மற்ற திட்டங்களைப் போலவே இது ஒரு கூட்டுத் திட்டமாகும். இது பொது மக்களுக்கான ஒரு திட்டம். இதில் அரசியல்வாதிகள், வணிகர்கள், கலைஞர், நடிகர், விளையாட்டாளர் இவர்களோடு ஒரு விண்வெளி பாத்திரமும் கூடப் பங்காற்றுகிறது. கோலாலம்பூரில் ஒரு தீப்பொறி. அதன் விளைவுகள் மலேசியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவுகிறது.

இந்த வீடியோ படம் உங்களுக்குப் பிடிக்குமாயின் இதனைப் பதிவிறக்கம் செய்து உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் காட்டுங்கள். கடைசியாக, இந்த வீடியோ படம் பற்றிய தகவல்களை இதில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி மற்றவர்களுக்கும் தெரிவித்து உதவுங்கள். வாக்களிப்பு நிலையத்தில் உங்களைச் சந்திப்போம்.

எண்டர் விசையைச் சொடுக்கவும்

Bookmark and Share

பாராட்டு

தரவிறக்கம்

எண் குறிப்புகளை நகல் எடுத்து உங்கள் அகப்பக்கத்தில் பதிவு செய்யவும்.

தரவிறக்கம்

  1. தரம் (140 MB) 1061 downloaded
  2. 1080p HD (275 MB) 1048 downloaded
  3. ைப்பேசி 480x360 (72 MB) 1026 downloaded
  4. MP3 (6.5 MB) 5968 downloaded

Undilah Facebook Picbadges

www.picbadges.com/undilah/2282022/

பட அறிக்கைகள்

கீழ்க்காணும் குறிப்பு எண்களைப் படிமம் செய்து உங்கள் அகப்பக்கத்திலோ வலைப்பதிவிலோ பதிவு செய்து கொள்ளலாம்.

மேசை பின்னணி

தரம் , அகலத்திரை , iPhone, iPad

தயாரிப்பாளர்

Pete Teo – தலைமைத் தயாரிப்பாளர்

பீட் தியோ ஓர் இசைக் கலைஞர் / நடிகர் / தயாரிப்பாளர். இவர் ஏஐஎம் விருதுகள் பல பெற்றவர். இவரது இசை அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பி.பி.சி. அனைத்துலக ஒலிபரப்புச் சேவை, தேசிய பொது வானொலி, கனடா ஒலிபரப்புக் கழகம், கே.பி.எஸ்., என்.எச்.கே ஆகியவற்றின் விருதுகள் பெற்றது. இவரது திரைப்படங்கள் வெனிஸ், கனஸ், தோக்யோ, ரொட்டர்டம், பெர்லின், புசான், கோல்டன் ஹோர்ஸ் தைபேய், டொரொன்டோ, பொம்பிடாவ் செண்டர், ஹாங்காங் ஆகிய இடங்களில் நடந்த திரைப்பட விழாக்களில் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஒரு கலைஞராக மட்டுமன்றி, சமூக அரசியல் பார்வையில் Here In My Home, 15Malaysia என்னும் வீடியோ படங்களையும் உருவாக்கியுள்ளார். இவ்விரு படங்களும் இலட்சக் கணக்கான மலேசியரால் பார்க்கப்பட்டுள்ளன. அண்மையில் யாசின் அஹ்மட்டின் 'டெலண்டைம்' படத்தில் இவர் இசை அமைத்த 'பெர்கி' என்னும் பாடலுக்கு 'அனுகெரஹ் சுவாரா லகு 2010' என்னும் இவ்வாண்டின் சிறந்த பாடலுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் அப்டிலின் செளகியின் பப்படம் 2 படத்தில் முக்கிய துணை நடிகராக நடித்து வருகிறார்.

Cசி.என்.என். ஜி.ஓ (CNN GO) நடத்திய கணிப்பில் ஆசியாவில் 2010இல் அதிகம் ரசிக்கப்பட்ட 135 கலைஞர்களின் பட்டியலில் பீட் தியோ சேர்க்கப்பட்டுள்ளார். வெளிவர வேண்டிய இசை ஆல்பங்களுக்கு நடுவே இவரது படைப்புகள் குறித்து சில வட்டார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகிறார். இலட்சிய நோக்குடைய செய்திப் படத் தயாரிப்புத் திட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார்.

Wiki சுயவிவரத்தை, வலைத்தளம்

Albert Law – இணை தயாரி ப்பாளர்

அல்பர்ட் லாவ் பீட் தியோவின் நீண்ட கால நண்பர். 2000ஆம் அண்டுகளில் வளர்ந்து வரும் பாடகர், பாடலாசிரியர்களாக இவர்கள் விளங்கினர். 2008இல் அல்பர்ட் லாவ் Here In My Home என்னும் படத்தில் பீட் தியோவிடம் துணை இயக்குநராகப் பணியாற்றினார். இவர்களது கூட்டணி 15Malaysia ைக் கடந்து இப்போது 'உண்டிலா' படத்தயாரிப்பில் தொடர்கிறது. அல்பர்ட் புதுமை இயக்குநர்களாகிய டான் சுய் முய், ஹோ யுஹாங் போன்றோருடன் பணியாற்றியுள்ளார்.

Bahir Yeusuff – இணை தயாரிப்பாளர்

பஹிர் யூசோவ் வித்தியாசமான மூன்று திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மற்றும் கிரே வோர்ல்ட்வைட் நிறுவனத்திற்காக இணையதள விளம்பரப் படங்களும் தயாரித்துள்ளார். 2010இல் மலாய் மொழி கற்பிக்கும் வீடியோ படத்தைத் தயாரித்தார். ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துக்காகவும் ஆசியான் கூடைப்பந்து போட்டிக்காகவும் டிவிசி என்னும் படங்களைத் தயாரித்துள்ளார். இவை இஎஸ்பிஎன் ஆசியா என்னும் தொலைக்காட்சியில் ஒளி பரப்பப்பட்டன. பென்ஜி லிம் என்னும் தனது கூட்டாளியுடன் 'மீட்டர்' என்னும் குறும்படத்தை இயக்கினார். 2009இல் 15Malaysia என்னும் படத் தயாரிப்பில் பீட் தியோவோடு இணைந்து பணியாற்றினார். பஹிரின் மிக அண்மைய செயல்திட்டம் காய் எம். பஹாரின் புதிய படமாகிய 'ரிலேசன்ஷிப் ஸ்டெடஸ்' ஆகும்.

அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

வாக்களிக்க நான் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஒரு மலேசியக் குடிமகனாக இருக்க வேண்டும். 21 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பதிவு பெற்ற வாக்காளராயும் இருக்க வேண்டும்.
வாக்காளராப் பதிவு பெற நான் என்ன செய்ய வேண்டும்?
தொண்டூழிய இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள், அரசியல் கட்சிகள் பொது நிகழ்ச்சிகளிலும் பொது இடங்களிலும் வாக்காளர் பதிவைச் செய்து வருகின்றன. அவர்கள் மூலம் நீங்கள் பதிவு பெறலாம். அஞ்சல் நிலையங்களிலும் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் அடையாள அட்டையோடு சென்று முகப்பிடங்களில் கேளுங்கள். இது மிக எளிதானது. பத்தே நிமிடங்களில் பதிவு  முடிந்துவிடும்.
நான் எப்போது பதிந்து கொள்ள வேண்டும்?
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம். வருகிற பொதுத்தேர்தலில் நீங்கள் வாக்களிக்க வேண்டுமானால் எவ்வளவு சீக்கிரத்தில் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் பதிந்து கொள்ளுங்கள். பொதுத் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பதிந்து கொண்டவர் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பது தேர்தல் ஆணையத்தின் விதி.
இந்தத் திட்டத்திற்கு நிதியளிப்பது யார்?
இந்த வீடியோ படத் திட்டம் எவருடைய நிதி உதவியாலும் செயல்படவில்லை. தயாரிப்புப் பணிகளுக்கான நிதி பூஜ்யமாகும். இத்திட்டத்தில் பணியாற்றும் ஒவ்வொருவரும் இலவசமான ஒரு தொண்டாகவே இதனைச் செய்கின்றனர். திட்டத்திற்கான கருவிகள் அனைத்தும் இரவல் பெறப்பட்டவை. இணைய தளம் மற்றும் வடிவமைப்புக்கான செலவுகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை. எல்லாச் செயல்பாடுகளும் Here In My Home என்ற படத் தயாரிப்புப் பாணியில் நடைபெறுகின்றன.
இந்தத் திட்டத்தை உருவாக்கியவர் யார்?
இந்தத் திட்டம் பீட் தியோ என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர் அப்டிலின் செளகி என்பவரை 2010இல் மெல்போனில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் சந்தித்து அவரை இத்திட்டத்தில் இணைத்துக் கொண்டார். சில வாரங்களுக்குப் பின் நமேவி இக்கூட்டுப் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். என்றாலும் இவர்கள் சந்தித்துப் பேசுவதில் ஏற்பட்ட சிக்கலால் 2011இன் நடுப்பகுதி வரை இத்திட்டம் செயலுக்கு வரவில்லை. நாற்பது பேர் கொண்ட குழுவினரின் தொடக்கநிலை படப்பிடிப்பு மே மாதத்தில் ஒன்பது இடங்களில் மூன்று நாட்களாக நடந்தது. மேலும் சில படப்பிடிப்புகள் வேறு சில இடங்களில் மற்ற நடிகர்களைக் கொண்டு தொடர்ந்து நடைபெறவுள்ளன.
இந்தப் பாடலை உருவாக்கியது யார்?
நமேவி சீனப் பாடல் வரிகளையும் இசையையும் வடிவமைத்தார். அப்டிலின் செளகியும் சசிதரன் ராஜுவும் முறையே மலாய் தமிழ்ப் பாடல்களுக்கான வரிகளை அமைத்தனர். ஒலிப்பதிவு நமேவி, அப்டிலின், பீட் ஆகியோரின் ஒலிப்பதிவுக் கூடங்களில் நடைபெற்றது. மூல இசை வடிவில் வார்த்தைகள் ஏதும் இல்லை. அவை தயாரிப்பின் இறுதிக் கட்டத்தில் பீட்சால் சேர்க்கப்பட்டன.
இந்த வீடியோ படத்தை தயாரித்தது யார்?
திட்டத் தயாரிப்பாளர் பீட் தியோ மேற்பார்வையில் அல்பர்ட் லோ, பாஹிர் யூசோப் இந்த வீடியோ படத்தைத் தயாரித்தனர். பென்ஜி லிம் இயக்கினார். ஒளிப்பதிவு செய்தவர் ஸ்டீவ் லோங். எடிடிங் செய்தவர் கைரில் எம். பஹார். பென்ஜியும் கைரிலும் பீட்சின் 15Malaysia என்னும் குறும்படத்தை 2009இல் இயக்கியுள்ளனர். இந்த இரண்டு திட்டங்களுக்கு இடையில் நடிகர்கள், படப்பிடிப்புக் குழுவினர், தயாரிப்பு நிர்வாகப் பணியாளர் பலரும் பணியாற்றியுள்ளனர்.
இத்திட்டத்தில் பங்கேற்றவர் எத்தனை பேர்?
இப்படத்தின் படப்பிடிப்பு, இசை அமைப்பு போன்ற தயாரிப்பு வேலைகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த 160க்கும் மேற்பட்டோர் பங்குபற்றியுள்ளனர். இவர்கள் நடிகர், படக்குழுவினர், தொண்டர், எடிட்டர், பாடகர், மொழிபெயர்ப்பாளர், இணையதள வடிவமைப்பாளர், இணைய தளச் சேவையாளர், நிர்வாகத் துறைப் பணியாளர் என்று பலதரப்பட்டவர் ஆவர். மேல் விவரங்களுக்கு  இந்த இணைய தளத்தின் நன்றி நவிலும் பக்கத்தைக் காண்க.
நடிகர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டனர்?
நமது முக்கிய நடிகர்கள் மலேசியாவில் பிரபலமானவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் படப்பிடிப்புக்காக அழைக்கப்பட்டனர். படக் குழுவினரும் தயாரிப்புத் தொண்டர்களும் ஒருங்கிணைக்கப்பட்டு படப்பிடிப்புக்குத் தயார்படுத்தப்பட்டனர். முடி திருத்தும் பணியாளர், கடைக்காரர்கள், மீன் விற்பவர்கள், மாணவர்கள் உண்மையிலேயே தெருவில் நடமாடும் பொது மக்களிலிருந்தே தெரிவு செய்யப்பட்டனர். படப்பிடிப்பின்போது கண்டறியப்பட்ட இவர்கள் நடிப்பதற்கு உடனே சம்மதித்தனர். இவர்கள் தொழில்முறை நடிகர்கள் அல்லர். நன்றிக்குரிய இவர்களின் பெயர்கள் முடிந்த வரை மிகக் கவனமாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எவருடைய பெயராவது விடுபட்டிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். அதோடு இந்த வீடியோவில் நடித்திருக்கும் அனைவருக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் முயற்சிக்கு நான் எப்படி உதவ முடியும்?
முடிந்த வரை அதிகமான அளவில் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் இந்த வீடியோ படத்தினைப் பார்க்க நீங்கள் ஊக்குவிக்கலாம். இந்த வீடியோ படத்தை உங்கள் இணையதள ஆவணங்களில் இணைப்பதற்கான வசதிகளை நாங்கள் இந்தப் படத்தில் இணைத்துள்ளோம். இதன் மூலம் உங்கள் வேலை எளிதாகிவிடும். தகவலைப் பரப்புவதற்காக பதாகைகள் வைத்துள்ளோம். இந்தப் படத்தையும் பாடலையும் உங்கள் கணினி அல்லது கைப்பேசிகளில் நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
உங்கள் வீடியோ படத்தை நான் எப்படி விமர்சனம செய்யலாம்?
உங்கள் விமர்சனத்தை உங்கள் Youtube பக்கத்தில் பதிவு செய்யலாம். எங்கள் Facebook கலந்துகொண்டு கருத்துரைக்கலாம். எங்கள் Twitter நீங்கள் தொடர் தகவல்களைப் பெறலாம்.
உங்கள் எதிர்காலத் திட்டங்களில் நான் எப்படிப் பங்கெடுத்துக் கொள்ளலாம்?
எங்களின் அடுத்த திட்டம் என்ன, எப்போது என்று இப்போது தெரிவிக்க இயலவில்லை. என்றாலும் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது பலருடைய உதவியை நாங்கள் கேட்போம். அப்போது உங்கள் உதவியும் தேவைப்படும். அடுத்த திட்டம் பற்றிய தகவல்களைப் பெற பீட் தியோவின் Twitter அல்லது Facebook ஆகியவற்றைப் பார்த்து வாருங்கள்.

பாராட்டு

கெளரவக் கலைஞர்

@Aisehman, Baki Zainal, Bront Palarae, Chelsia Ng, Daphne Iking, Jehan Miskin, Johan F. Khairuddin, Karamjit Singh, Lai Meng, Lee Chong Wei, Nurul Izzah Anwar, Rosnah Abd Rashid Shirlin, Rina Omar, Reshmonu, Sharifah Amani, Sazzy Falak, Reza Salleh, Tengku Azmil Zahruddin, Tony Fernandes, Wardina Safiyyah, Wee Ka Siong, Tengku Razaleigh Hamzah, Namewee, Afdlin Shauki, Pete Teo, Benji Lim, Yasmin Yusuf, Albert Law, A. Kohilan Pillay, Jason Lo, Mohan, Khalid Samad, Aizat Amdan, Tee Hui Ling, Usha Nandhini, Chia Ting Ting, Nur Farina, Sassi Tharan Rajoo, Nik Nazmi, Tony Pua & David Lai.

தொண்டூழியர்

Allavneen, Amanullah, Ananthi, Arbaiyah Arifin, Arun, Ashur Aiman, Bee Tong, Cassie Goh, Choong Ooi Khang, Darniyati, Dr. Tan, Edward Ong, Elaine Tan, Emily Tan, Foo Guan Foong, Hari Krishnan, Ho Sze Chieng, Ivan Slowee, Jabba the Hutt, Jack Lee, Jeniffer Anne, Jinu, K.F. Ng, Kader Maideen, Kajtijah, Kong Si Ying, Lee Sheng Wang, Liew Yan Bin, Liew Ye Tzer, Maggie Liew, Mervyn Lee, Ms. TS-29-30, Muhammad Nur, Nagaraj, Nainav, Najwa Amira, Nalla Ibrahim, Ng Yu Sheng, Nikken Chong, Nur Adlina Izuddin, Pantian, Phui Mun, Priya Kulasagaran, Rahim, Rajan, S. Aimeer, Raravanan, Shalini Rajakumar, Suraya Amer, susan, Uncle Ismail & Ms. Hanis, Vinoth Kumar, Wong Mee Len, Yati, Yewi, Zahar Ahmad, Zahier Zamri, Zaim 'Baszm' Zaidee

தலைமைத் தயாரிப்பாளர்

Pete Teo

தயாரிப்பாளர்

Albert Law & Bahir Yeusuff

இணை தயாரிப்பாளர்

Afdlin Shauki & Fred Chong

இயக்குநர்

Benji Lim

ஒளிப்பதிவு இயக்குநர்

Steve Long

படத்தொகுப்பாளர்

Khairil M. Bahar

தயாரிப்பு மேலாளர்

Abbas Yeusuff

ஒளிப்பதிவு உதவியாளர்

Simon Ping

தயாரிப்பு உதவியாளர்

Aizat Naim, Ong Chun Wai, Sandie Lee, Teh U-Jinn

படத் தள ஒலி

Michael Leow

இசை வடிவமைப்பாளர்

Afdlin Shauki, Fred Chong, Namewee, Pacai, Pete Teo

இசை அமைப்பாளர்

Namewee

பாடலாசிரியர்

Afdlin Shauki, Namewee, Pete Teo, Sassi Tharan Rajoo

பின்னணிக் குரல்

Abbas Yeusuff, Arwin Muruga, Albert Law, Lakshwin Muruga, Lvinn Law, Nurul Izzah Anwar, Dinah S, Winnie Chiang, Zewen, Elise Yong

புகைப்பட

Azrul K. Abdullah

கருவிகள்

Fred Chong

இணைய தளச் சேவை

Simon Lim

இணைய தள வடிவமைப்பு

Tommy Ng

மொழிபெயர்ப்பாளர்கள்

Albert Law, Copyleft Studio, Emily Tan, Fahmi Fadzil, Khang Tsung Hui

நன்றி

Air Adventure flying club, Banana Leaf Restaurant, Bot Hong, Church of St. Francis Xavier, Common Wisdom Teashop, David Hiscock, Global Green Synergy Sdn Bhd, Ho Yuhang, John-son oei, Joseph Lim, Kenneth Tan, Little India Jewellers Sdn Bhd, Malaysian Parliament, Masjid Al-Taqwa TTDI, Neil Foo, Restoran Yuk Kee, Sam Lim Eng Sim, Sri Mahamariamman Temple, Taman Tun Supermarket, Thean Hou Temple, Y&R Malaysia.

இணைப்புகள

Electoral Commission Electoral Roll Database
Check here to be sure you are registered.
What Do You Want?
A University education that won't break the bank? Why cigarettes are so damn expensive? Do you ever wonder how stuff gets decided? Do you find the situation unfair? This campaign will help you understand why.
UndiMsia!
Why should you vote? What issues are relevant?
National Institute for Democracy & Electoral Integrity
A resource site works towards free and fair elections in Malaysia by providing information and education.
KOMAS Voter's Rights Page
Pusat KOMAS sedang melaksanakan program pendidikan kewarganegaraan untuk meningkatkan kesedaran hak-hak asasi manusia berdasarkan urustadbir baik dan meningkatkan penyertaan rakyat dalam urustadbir kerajaan.
If you are a voter registration or voter education organisation that is interested to be linked here, please contact us.